Monday, April 6, 2026

வேகம்

என்னதான் வாகனம் வேகமாக சென்று கொண்டு இருந்தாலும் வளைவு வரும் போது வேகம் குறைந்தால் தான் சரியாக வளைய முடியும். 

அது போல தான் வாழ்க்கையும் சிறிது வேகம் குறைந்தால் தான் சீராக செல்ல முடியும்.

Friday, March 27, 2026

புரியாத புதிர்

நேற்று ரயில் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என தோன்றியது. ஏன் எனில் நான் சரியான நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்தேன் ரயில் தாமதம்.

இன்று நான் தாமதம் ரயில் விரைந்தது.

ஒரே மனம் ஆனால் இரு வேறு எண்ணங்கள்.

நாடுகள் தங்கங்களை விற்க ஆரம்பித்து விட்டன. விலை குறைய ஆரம்பித்து விட்டது.லாப நோக்கிற்காக தங்கம் உச்சத்தில் இருந்த போது வாங்கியவர்களுக்கு நட்டம் நிட்சயம்.

Thursday, March 26, 2026

வாழ்க்கை பயணம்

இன்றும் (27.03.2026) தொடர்கிறது என் தொடர் வண்டி பயணம் அலுவலக பணியை தொடர.

தனக்கு சொந்தமில்லாத இடம் மற்றும் மூல பொருளுக்காக நாடுகள் போராடி கொண்டிருக்கின்றன. எப்பொழுது உணர்ந்து திருந்துவார்கள் தெரியவில்லை.

உயிர் சேதம் மற்றும் பணவீக்கம் மட்டுமே மிச்சம். நலிந்த மக்கள் மீது தான் தாக்கம்.